கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்... 'வில்லன்' படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவு..!

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது.
அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்த படத்தில் ஒன்றுதான் வில்லன். இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த இந்த படத்தில் அஜித்குமார், மீனா, கிரண், சுஜாதா, விஜயகுமார், ரமேஷ் கண்ணா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் அதிக வசூலையும் ஈட்டு தந்து இருந்தது.
இந்நிலையில் 'வில்லன்' படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்தன.இதனை அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்