1. Home
  2. தமிழ்நாடு

ajithkumarracing இணையதளம் அங்கீகரிக்கப்பட்ட தளம் அல்ல - சுரேஷ் சந்திரா

1

நடிகர் அஜித் திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ் எனும் நிறுவனத்தை துவங்கி, பைக் ரைடிங் ஆர்வலர்களுக்கு வணிக நோக்கில் ரைடிங் சார்ந்த சேவைகள வழங்கி வருகிறது.

இதுதவிர அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கார் ரேசிங் பந்தயத்தில் கலந்து கொள்ள போவதாக அஜித் குமார் அறிவித்து 'அஜித் குமார் ரேசிங்'-ஐ துவங்கினார். அந்த வகையில், துபாய் ஆட்டோடிரோம் பந்தய களத்தில் நடிகர் அஜித் குமார் போர்ஷே ஜிடி 3 கப் காரை டெஸ்டிங் செய்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் சிறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. மேலும், ரேசிங் பயிற்சி வீடியோவை அஜித் குமாரின் மனைவி ஷாலினி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

இதையொட்டி அஜித் குமார் ரேசிங் கார் பந்தைய அணிக்கு தற்பொழுது https://ajithkumarracing.com/ என்ற புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் கொடுத்த நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, "www.ajithkumarracing.com இணையதளம் அங்கீகரிக்கப்பட்ட தளம் அல்ல; அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவாக இருந்தாலும் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகள் மூலமாக மட்டுமே வெளியிடப்படும்; தயவுசெய்து இந்த தளத்தை புறக்கணியுங்கள் என கூறியுள்ளார். 

Trending News

Latest News

You May Like