1. Home
  2. தமிழ்நாடு

கார் ரேஸ்சில் அஜித் எடுக்கும் ரிஸ்க்..!24 மணி நேரம் நடக்கும் ரேஸ் இது ..!

Q

அஜித் குமார் ரேசிங் என்ற பந்தய அணியை சொந்தமாக வைத்துள்ளார். இதை அவர் செப்டம்பர் 2024-ல் தொடங்கிய நிலையில், தற்போது கலந்து கொள்ளும் Porsche 992 போட்டி மட்டும் இன்றி, ஆசிய ஃபார்முலா பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப், பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப் மற்றும் எஃப்ஐஏ ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்க உள்ளார். தற்போது அஜித் பயிற்சி எடுத்து வரும் கார் ரேஸ், ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 13 ஆம் தேதி முடிவடையும்.

இந்த நிலையில் அவர் பங்கேற்க போகும் கார் ரேஸ் எவ்வாறு நடக்கும் அதில் உள்ள விதிகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம். 

நடிகர் அஜித் குமார் துபாயில் பங்கேற்கும் இந்த கார் ரேஸ் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்ப்படுத்தி வருகிறது. ஆனால் இந்த ரேஸ் மற்ற கார் ரேஸ்களை போல் இல்லாமல் சற்று மாறுப்பட்ட ஒன்றாகும். வழக்கமான கார் ரேஸ்சில் குறிப்பிட்ட லேப்கள் ஓட்டி அதில் முதலாவதாக வருபவர் தான் வெற்றியாளர். 

அஜித் குமார் பங்கேற்கும் இந்த ரேஸ் ஒரு எண்டுரன்ஸ் (Endurance) பார்மட் ரேஸ் ஆகும். அதாவது 24 மணி நேரம் நடக்கும் ரேஸ், இன்று மதியம் 1 தொடங்கும் ரேசில் காரை எடுத்தால், அடுத்த நாள் மதியம் 1 மணி வரைக்கும் ஓட்ட வேண்டும். ஒரு அணியில் 4 டிரைவர்கள் இருப்பார்கள், அவர்கள் மாற்றி மாற்றி கார் ஓட்ட வேண்டும், ஒரு டிரைவர் குறைந்தப்பட்சம் 2 மணி நேரம் ஓட்ட வேண்டும்.

இதில் அணியின் கேப்டன் தான் அதிக நேரம் காரை ஓட்ட வேண்டும், அப்படி பார்த்தால் அஜித் குமார் ரேசிங்கின் கேப்டன் அஜித் குமார் தான், அதனால் அவர் 14 மணி நேரம் முதல் 18 மண் நேரம் வரை காரை ஓட்ட வேண்டும்.

24 மணி நேரம் உள்ளதே என்று பொறுமையாக எல்லாம் கார் ஓட்ட முடியாது, இந்த ரேஸ் டிராக்கில் குறைந்தது 240கி.மீ வேகத்தில் கார் ஓட்ட வேண்டும். மேலும் இந்த ரேஸ் வெறும் டிரைவர் சமந்தபட்டது மட்டும் இல்லை 24 மணி நேரம் ஓடுகின்ற அளவுக்கு காரை தயார் செய்ய வேண்டும்.

அதில் வண்டியில் மைலேஜ், டயர், மெக்கானிகல் கோளாறு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும், அதுக்கென்று தனியாக ஒரு மெக்கானிக் டீம் நிச்சயம் தயார் நிலையில் இருக்கவேண்டும்.

Trending News

Latest News

You May Like