1. Home
  2. தமிழ்நாடு

அஜித்குமாரின் பிறந்த நாளுக்கு மனைவி ஷாலினி கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!

1

நடிகர் அஜித் குமார் கடந்த 1971ஆம் ஆண்டு சுப்பிரமணியம் மற்றும் மோகினி தம்பதிக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். பத்தாம் வகுப்பு வரை ஏஸன் மெமரியல் சீனியர் செகண்டரி பள்ளியில் படித்த இவர், என்ஃபீல்டு கம்பெனியில் மெக்கானிக் வேலைக்காக ஆறு மாதம் பயிற்சி எடுத்தார். இதையடுத்து, தந்தையின் வற்புறுத்தலால், ஜவுளி எக்ஸ்போர்ட் செய்யும் கம்பெனிக்கு பணியில் சேர்ந்தார். அஜித்திற்கு சினிமா மீது இருந்த ஆர்வத்தால், சினிமாவில் நடிகராக முயற்சி செய்தார். இதையடுத்து, அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் அடுத்தடுத்த தமிழ்ப் படங்களில் ஹீரோவாக நடித்து மெல்ல தமிழ் சினிமாவில் கால்பதிக்கத் தொடங்கிய அஜித் குமார், இன்று தமிழ் நாட்டை ஆட்டிப்படைத்து வருகிறார். பல முன்னணி இயக்குனர்களுடன் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார்.

அஜித்தின் நடிப்பில் கடைசியாக துணிவு படம் கடந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த இத்திரைப்படம் வெளியாகி ஒன்றரை ஆண்டிற்கு மேல் ஆகியும் அஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு கூட இன்னும் முடிவடையவில்லை. இது, அஜித் ரசிகர்களை மிகப்பெரிய ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தான் சொல்லவேண்டும். அஜித்குமார் கைவசம் தற்போது, விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்கள் உள்ளன. இதில், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு மே கடைசி வாரத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் அஜித் தனது 53வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்திற்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் Ducati bike பரிசாக கொடுத்துள்ளார். இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பேபி ஷாலினி, குழந்தை நட்சத்திரமாகவே 55க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் விஜய்க்கு ஜோடியாக காதலுக்கு மரியாதை படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் ஷாலினி. இதையடுத்து, இரண்டாவது படமாக அமர்க்களம் திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அஜிதா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.


 

Trending News

Latest News

You May Like