முதல் முறையாக கார் விபத்து குறித்து பேசியிருக்கிறார் அஜித் குமார்..! அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்..!

துபாயை அடுத்து போர்ச்சுக்கலில் நடந்த கார் பந்தயத்தில் அஜித் குமார் மற்றும் அவரின் ரேஸிங் அணியினர் கலந்து கொண்டார்கள். அதற்காக பயிற்சியில் ஈடுபட்டபோது அஜித் குமார் விபத்தில் சிக்கினார் என தகவல் வெளியானது. விபத்தில் சிக்கினாலும் அஜித் குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார், கார் தான் சேதம் அடைந்தது என கூறப்பட்டது. அஜித் குமார் காயம் இன்றி தப்பியது குறித்து அறிந்ததும் ரசிகர்கள் நிம்மதி அடைந்தார்கள்.
அந்த விபத்து குறித்து பேட்டி ஒன்றில் அஜித் குமார் கூறியதாவது,எஸ்டோரில் டிராக்கில் ரேஸில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது பெருமையான தருணமும் கூட. என் டைமிங்கில் முன்னேற்றம் ஏற்படுவதில் சந்தோஷமாக இருக்கிறேன்.காலையில் பயிற்சியில் ஈடுபட்டபோது என் கார் விபத்துக்குள்ளானது. அது மோசமான விபத்து. என் அணியினர் துரிதமாக செயல்பட்டு காரை சரி செய்தார்கள். அதன் பிறகு நேராக தகுதிச் சுற்றில் கலந்து கொண்டேன். அது ரொம்ப டென்ஷனான நேரம் எனக்கு என்றார்.
எனக்கு பிடித்த இந்த ரேஸை என் ரசிர்களும் விரும்புவதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல நான் இங்கு என்ன செய்கிறேன் என்பதை தெரிந்து கொள்ள தமிழ்நாட்டில் ஆர்வமாக இருக்கும் அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அனைவருக்கும் நன்றி என அஜித் குமார் மேலும் தெரிவித்தார். அஜித் வழியில் பலரும் கார் ரேஸில் கவனம் செலுத்தத் துவங்கியிருக்கிறார்கள். அது பற்றி அறிந்த அஜித் சந்தோஷப்பட்டுள்ளார்.
இந்த முறை லேசான விபத்து என ரசிகர்கள் நினைத்த நிலையில் மோசமான விபத்து என அஜித் குமார் கூறியிருப்பது அவர்களை கவலை அடைய செய்திருக்கிறது.