1. Home
  2. தமிழ்நாடு

அஜித் ஜென்டில் மேன் எல்லாம் கிடையாது... அஜித் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ..!!

1

துணிவு படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘ஏகே 62’ படத்தில் நடிப்பதற்கு தயாராகிவிட்டார். ஆரம்பத்தில் ‘ஏகே 62’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது, அதற்கேற்ப இயக்குனரும் தனது சமூக வலைத்தளங்களில் ‘ஏகே 62’ என்று குறிப்பிட்டும் கவர் போட்டோவில் அஜித்தின் புகைப்படத்தையும் வைத்திருந்தார். ஆனால் விக்னேஷ் சிவனின் கதை அஜித்திற்கு திருப்திகரமானதாக இல்லாததால் இந்த திட்டத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார்.

இதையடுத்து அஜித்தின் 62வது படத்தை மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக லைக்கா தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. மொத்த படப்பிடிப்பும் 70 முதல் 90 நாட்களுக்குள் முடித்துவிட வேண்டும் என மகிழ் திருமேனி ஷெட்யூல் செய்துவிட்டாராம். இந்தப் படத்திற்காக அஜித் தனது கெட்டப்பை மாற்ற முடிவு செய்துள்ளாராம். கடந்த சில வருடங்களாகவே தான் நடித்த படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வருவதை வழக்கமாக வைத்துள்ளார் அஜித். ஆனால், இந்தப் படத்தில் அஜித்தின் லுக் வேற லெவலில் இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கமலின் வேட்டையாடு விளையாடு படத்தை தயாரித்த மாணிக்கம் நாராயணன், அஜித் மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இவர் கமல் ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு, பார்த்திபனின் வித்தகன், வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர்.சமீபத்தில் பேட்டியில், அஜித் நிஜ வாழ்க்கையிலும் நடித்து கொண்டிருப்பதாகவும், அவர் தன்னிடம் பணம் வாங்கி விட்டு ஏமாற்றிவிட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

”நடிகர் அஜித் சில ஆண்டுகளுக்கு முன் தனது பெற்றோரை மலேசியாவுக்கு சுற்றிலா அனுப்பிவைக்க கடனாக பணம் வாங்கினார். என்னுடைய தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாகவும், திருப்பித் தரவேண்டிய பணத்தை சம்பளத்தில் கழித்துக்கொள்ளுங்கள் என்றார்.ஆனால் இப்போது வரை எந்த படத்திற்கும் என்னிடம் ஒப்பந்தமும் செய்யவில்லை, எனது பணத்தையும் திரும்ப தரவில்லை. 

அதற்கான ஆதாரங்கள் தற்போது தன்னிடம் உள்ளதாக பேசியிருக்கும் மாணிக்கம் நாராயணன், அவர் ஜென்டில் மேன் எல்லாம் கிடையாது, ஃபிராடு என்றும், திமிரு பிடித்தவர் என்றும் பேசியிருக்கிறார். பத்திரிகையாளர்களுக்கு அஜித் பணத்தை கொடுத்து பெருமையாக எழுத சொல்வதாகவும் மாணிக்கம் நாராயணன் கூறியிருக்கிறார். தயாரிப்பாளரின் இந்த பேச்சு, அஜித் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து நடிகர் அஜித் குமாரின் தரப்பில் இன்னும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.சில தினங்களுக்கு முன், ஜவான் படம் தமிழில் வெளியான பேரரசு படத்தின் காப்பி எனக் கூறி தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது

Trending News

Latest News

You May Like