வலிமை படப்பிடிப்பில் தல அஜித்! வைரலாகும் புகைப்படம்!

தமிழ் திரையுலகின் தல நடிகர் அஜித்தின் அடுத்தபடம் வலிமை. இந்த படத்தை மறைந்த முன்னாள் தமிழ் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப்படத்தின் இயக்குநர் வினோத் .
இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாதி படப்பிடிப்பில் கொரோனா ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது திரைத்துறைப் படப்பிடிப்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து படிப்படியாக படப்பிடிப்பிற்கான வேலைகள் துவங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஹைதராபாத் ராமாஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. அஜித்திற்கான காட்சிகள் எடுக்கப்பட்டு படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. பல மாதங்களாக வலிமை பற்றி எந்த அப்டேட்டும் இல்லாத நிலையில், அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.