ஷாலினி பிறந்தநாளுக்கு அஜித் ஸ்பெஷல் கிப்ட்..!!
நடிகை ஷாலினி தமிழில் காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் அறிமுகமான பின்னர் நடிகர் அஜித்துடன் அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்தார். அப்படத்தின் போது தான் அஜித் - ஷாலினி இடையே காதல் மலர்ந்தது. அப்பட ஷூட்டிங் சமயத்தில் உருகி உருகி காதலித்த இந்த ஜோடி அப்படம் ரிலீஸ் ஆகி வெற்றிபெற்றபின் திருமணம் செய்துகொண்டனர்.
அஜித் உடனான திருமணத்துக்கு பின்னர் மணிரத்னத்தின் அலைபாயுதே, பிரசாந்த் ஜோடியாக பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களில் நடித்த ஷாலினி, அதன் பின்னர் சினிமாவை விட்டு ஒட்டுமொத்தமாக விலகினார். உச்ச நடிகையாக இருக்கும் போதே சினிமாவில் இருந்து விலகிய ஷாலினி இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்தினார்.
கடந்த 22 ஆண்டுகளாக ஷாலினி ஒரு படத்தில் கூட தலைகாட்டவில்லை. இருந்தாலும் அவரின் படங்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளன. அந்த அளவுக்கு குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில், நடிகை ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
அதன்படி ஷாலினி தன்னுடைய பிறந்தநாளை தனது தங்கை ஷாமிலி, தம்பி ரிச்சர்டு, மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்கா ஆகியோருடன் கொண்டாடி உள்ளார். நடிகர் அஜித் வெளிநாட்டில் இருப்பதால் அவரால் ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் தன் மனைவிக்கு சர்ப்ரைஸாக ஒரு காஸ்ட்லி கிஃப்ட் ஒன்றை கொடுத்திருக்கிறார் அஜித். அது வேறெதுவுமில்லை தனக்கு பிடித்த லெக்சஸ் காரை மனைவி ஷாலினிக்கு பரிசாக கொடுத்துள்ளார் அஜித்.