கலக்கத்தில் அஜித் ரசிகர்கள்..! விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது!
மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உருவாகியிருக்கிறது.
‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
இதனையொட்டி, படத்தின் முதல் பாடலான, ‘சவதீகா’ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. மேலும், புத்தாண்டை முன்னிட்டு இன்று படத்தின் டிரைலர் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த தயாரிப்பு நிறுவனம், அஜித் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சில தவிர்க்க முடியாத காரணத்தால் பொங்கல் வெளியீட்டில் இருந்து பிற்போடப்படுவதாகவும், விரைவில் மறு அறிவிப்பு வெளியாகும் என்றும் லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.