அஜித் , சிம்பு படத்தை பாக்காதீங்க !! சூர்யா படத்தை பாருங்க !! கௌதம் வாசுதேவ் மேனன்

அஜித் , சிம்பு படத்தை பாக்காதீங்க !! சூர்யா படத்தை பாருங்க !! கௌதம் வாசுதேவ் மேனன்

அஜித் , சிம்பு படத்தை பாக்காதீங்க !! சூர்யா படத்தை பாருங்க !! கௌதம் வாசுதேவ் மேனன்
X

திரைப்படத்துறைக்கு வரும் முன்னர் அறியப்பெற்ற விளம்பரப் பட உருவாக்குநராக இருந்தார். இயக்குநர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்து , மின்சார கனவு படத்தில் பணியாற்றினார். விளம்பர படங்கள் எடுப்பதற்காக இவர் உருவாக்கிய போட்டான் பேக்டரி நிறுவனம் , தற்போது திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்குகிறது.

தனது தயாரிப்பில் வெளிவரும் அனைத்து தமிழ்த் திரைப்படங்களுக்கும் தூய தமிழில் பெயரிட்டுள்ளார். தமிழில் மீது இருக்கும் பற்றை காட்டுகின்றது. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களுள் ஒருவர் .இவருக்கு  தமிழ் ரசிகர்களுக்கு பல அழகான படங்களை கொடுத்தவர். இவர் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

தற்போது , உலகமெங்கும் கொரோனா பரவி வருகிறது. அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இயக்குநர் கெளதம் மேனன் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் , என்னுடைய படங்கள் அச்சம் என்பது மடமையடா மற்றும் என்னை அறிந்தால் ஆகிய இரண்டு திரைப்படங்களை இப்போது பார்க்க வேண்டாம். ஏனெனில், ‘AYM’-ல் வரும் சிம்பு அவரது காதலியை கூட்டிக் கொண்டு ரோட் ட்ரிப் செல்வார்.

அதேபோல், ‘என்னை அறிந்தால்’ படத்தில் வரும் அஜித், அவரது பொண்ணை அழைத்து வெளியூர்களுக்கு செல்வார். தற்போது இந்த இரு படங்களும் நடைமுறையில் நடக்காது. அதனால், இந்த படங்களையும் பார்க்காமல் தவிர்த்து விடுங்கள். அதற்கு பதில் வாரணம் ஆயிரம் படம் பார்த்து உடம்பை மெயின்டய்ன் செய்யுங்கள்”என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Newstm.in

Next Story
Share it