1. Home
  2. தமிழ்நாடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

1

திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்த சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

அக்கா சீக்கிரமே குட் நியூஸ் சொல்லப் போறாங்க போன்று. அடுத்த பட அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம். அதிலும் தலைவர் ரஜினி நடிப்பாரா என தெரியவில்லையே. எதுவாக இருந்தாலும் சீக்கிரமாக அறிவிப்பை வெளியிடுங்கள் என தெரிவித்துள்ளனர்.

நான் எந்த கோவிலுக்கு செல்வதாக இருந்தாலும் திமுக எம்.பி.யான கனிமொழி அக்காவிடம் சொல்வேன். அவர் ஆட்களை ஏற்பாடு செய்து நான் சாமி தரிசனம் செய்ய உதவி செய்வார் என பேட்டி ஒன்றில் தெரிவித்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

இந்நிலையில் திருப்பதி கோவிலில் ஐஸ்வர்யாவை பார்த்தவர்களோ, இதற்கும் கனிமொழி அக்கா தான் ஏற்பாடு செய்து கொடுத்தாரா என கேள்வி எழுப்பியுள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டே இரண்டு விஷயத்திற்காக தான் வீட்டை விட்டு வெளியே வருவார். ஒன்று கோவில், மற்றொன்று ஷூட்டிங் என கனிமொழி தெரிவித்தார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், கனிமொழி எம்.பி.யும் பல ஆண்டுகளாக தோழிகளாக இருந்து வருகிறார்கள். இந்த நட்பு குறித்து வெளியே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என இருவரும் நினைக்கிறார்கள். பல வருட தோழிகள் சேர்ந்து ஒரு போட்டோ கூட இன்ஸ்டாகிராமில் போடாமல் இருக்கிறீர்களே அக்கா என்றார்கள் ஐஸ்வர்யாவின் ரசிகர்கள்.


கடந்த ஆண்டு ஐஸ்வர்யாவுக்கு நல்லதும் நடந்தது, கெட்டதும் நடந்தது. பல ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸானது. அந்த படத்தில் தன் அப்பா ரஜினியை முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அது நல்ல விஷயம்.


காதல் கணவரான தனுஷிடம் இருந்து கடந்த ஆண்டு விவாகரத்து கிடைத்தது. தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடந்த நவம்பர் மாதமே அவர்களுக்கு விவாகரத்தும் முடிவானது. 

Trending News

Latest News

You May Like