குழந்தைகளின் படிப்பு செலவுக்காக ஆண்டுதோறும் 10 லட்சம் உதவி செய்ய தயார் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!
இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் வாரிசுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கவிருப்பதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதற்கு முதல்படியாக 2024-ம் ஆண்டுக்கான நிதியுதவி தொகையை வழங்கினார்.
3 திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் நடிகர் ஜீவா மற்றும் சங்கீதாவோடு சேர்ந்து இவரும் நடுவராக கலந்து கொண்டார்.அதே நேரத்தில் சமூக வலைதளத்திலும் செம ஆக்டிவாக ஐஸ்வர்யா இருந்து வருகிறார். அடிக்கடி ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு பலருக்கு முன்மாதிரியாகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனர் சங்கத்தில் குழந்தைகளின் படிப்புக்காக தான் வருடத்திற்கு 10 லட்சம் தன்னுடைய சொந்த பணத்திலிருந்து தர போவதாக அறிவித்திருக்கிறார்.
அதற்கு முன்னேற்பாடாக இயக்குனர் சங்கர் தலைவர் ஆர்.வி உதயகுமாரிடம் ஐந்து லட்சம் காசோலையை வழங்கி இருக்கிறார். அப்போது அது பற்றி பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நான் சில திரைப்படங்களில் இயக்கி இருக்கிறேன். என்னைப் போல இயக்குனர்களாக இருக்கும் பலர் அவர்களுடைய குழந்தைகளின் படிப்பு செலவுக்காக ஏதாவது உதவி செய்யலாம் என்று கேட்டு வருகிறார்கள். எனக்கோ அது சரியான விஷயம் என்று தோன்றியது.
என்னால் முடிந்ததை நான் செய்கிறேன். இதுபோன்று தமிழ் இயக்குனர் சங்கத்தில் இருக்கும் இயக்குனர்களின் குழந்தைகளின் படிப்பு செலவுக்காக பலர் உதவ வேண்டும் என்று அந்த பேட்டியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.