ரசிகரிடம் சத்தியம் வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்! ஏன் தெரியுமா?

ரசிகரிடம் சத்தியம் வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்! ஏன் தெரியுமா?

ரசிகரிடம் சத்தியம் வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்! ஏன் தெரியுமா?
X

தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். மலையாளம், ஹிந்தி படங்களிலும் அவர் தன் முத்திரையை பதித்துள்ளார். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

 இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார். இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் அளித்த ஒரு ரசிகர், ‘உங்களுடைய தீவிர ரசிகன் நான். உங்களுக்காக நான் சாகத் தயார்’ என்று கூறியிருக்கிறார். இதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ், ‘உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. ஆனால் தயவுசெய்து இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். வாழ்க்கை என்பது சாவதற்கு இல்லை. நான் என்றும் உங்கள் நண்பராக இருப்பேன். எனவே இதுபோன்ற வார்த்தைகளை மீண்டும் சொல்ல மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்யுங்கள்’ என்று பதிலளித்துள்ளார். 

View this post on Instagram

❤️❤️❤️Clicked @antonyfernandophotography

A post shared by Aishwarya Rajessh (@aishwaryarajessh) on

newstm.in

Next Story
Share it