இந்திய விமான நிலைய ஆணையத்தில் 309 காலிப்பணியிடங்கள்! டிகிரி போதும்; ரூ. 1,40,000 சம்பளம்..!

பணியின் விவரங்கள்
பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
ஜூனியர் நிர்வாகி (Air Traffic Control) | 309 |
இதில் பொதுப் பிரிவில் - 125, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் - 30, ஒபிசி பிரிவில் - 72, எஸ்சி - 55, எஸ்டி - 27 என வழங்கப்படுகிறது.
இப்பணியிடங்களுக்கு 24.05.2025 தேதியின்படி, விண்ணப்பதார்கள் அதிகபடியாக 27 வயது வரை இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு உள்ளது.
இயற்பியல் மற்றும் கணிதம் பாடங்கள் கொண்டு இளங்கலை அறிவியல் (B.Sc) பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் படிப்பை முடித்திருக்க வேண்டும். பொறியியல் படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் இடம்பெற வேண்டும். ஆங்கிலம் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்
இந்திய விமான நிலைய ஆணையத்தில் உள்ள ஜூனியர் நிர்வாகி (Junior Executive) பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் 40,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்கள் தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு கணினி வழியில் நடைபெறும். தேர்வில் தேர்ச்சி அடையும் நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு/ Voice Test/ Psychoactive Substances Test/ Psychological Assessment/ Physical Medical Examination/ Background Verification ஆகியவற்றிக்கு அனுமதிக்கப்படுவார்கள். கணினி வழி தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.aai.aero/en/careers/recruitment என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ. 1000 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
இந்திய விமான நிலைய ஆணையத்தில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் ஆன்லைன் வழியாக ஏப்ரல் 25-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.