1. Home
  2. தமிழ்நாடு

தொடர் விடுமுறையால் விமான கட்டணம் உயர்வு : ரூ. 3,000 டிக்கெட் ரூ.10,000-க்கு விற்பனை..!

1

சுதந்திர தினம் வருகின்ற செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை உள்ளதால் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். 

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இருப்பினும், விமானங்களில் செல்வோர் டிக்கெட் விலையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு வழக்கமாக ரூ. 3,000-க்கு விமான டிக்கெட் விற்பனை செய்யப்படும்.  ஆனால், தொடர் விடுமுறையை பயன்படுத்தி திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட விமானங்களில் செல்வதற்கான டிக்கெட் ரூ. 10,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மேலும், சென்னையில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு செல்வதற்கான டிக்கெட் ரூ. 15,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.  இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விமான பயணிகள் டிக்கெட் விலையை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். 

Trending News

Latest News

You May Like