சென்னையில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் - உயிர் தப்பிய 5 எம்.பி.க்கள்..!
ஏர் இந்தியா விமானம் 5 எம்.பி.க்கள் உட்பட 150 பயணிகளுடன் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றது.
நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக, நேற்று இரவு சென்னையில் அவசரமாக தரையிறங்கியது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த உடனடி நடவடிக்கை காரணமாக, பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர். மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் எம்.பி.க்கள் மற்றும் பயணிகள் அனைவரும் டெல்லிக்கு அனுப்பப்பட்டனர்.
.png)