தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓடுபாதையில் ஏர் இந்தியா விமானம் நிறுத்தி வைப்பு..!

கோல்கட்டா விமான நிலையத்தில் இருந்து காசியாபாத்திற்கு ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX 1511 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. ஆனால் அப்போது எதிர்பாராத விதமாக விமானம் புறப்படவில்லை.
கிட்டத்தட்ட 1 மணிநேரத்துக்கும் அதிகமாக விமான ஓடுபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் மேலேழும்பாமல் இருந்துள்ளது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் என்ன கோளாறு என்பதை கண்டறியும் பணியில் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
கோல்கட்டா, ஹிண்டன் விமானம் அறிவிக்கப்பட்ட நேரத்தில் புறப்டவில்லை. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் தாமதமாக இயக்கப்பட்டது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.