1. Home
  2. தமிழ்நாடு

அண்ணாமலையின் புகைப்படத்தை எரித்தும் காலணியால் அடித்த அதிமுகவினர்..!

1

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசினார். தொடர்ந்து நான் பின் வாங்க மாட்டேன். இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவேன் அண்ணாமலை தெரிவித்த நிலையில்.. அதற்கு தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பாக அண்ணாமலையின் புகைப்படத்தை எரித்தும் காலணியால் அடித்து அதிமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து அண்ணாமலையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் போராட்டத்தால் மத்திய பேருந்து நிலையம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.



 

Trending News

Latest News

You May Like