1. Home
  2. தமிழ்நாடு

எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தபடி அதிமுக மீண்டும் ஒன்றாக மலரும்..ஓ.பன்னீர்செல்வம் உறுதி..!

1

தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்குக் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-தந்தை பெரியார் திராவிட இயக்கத்தின் தலைக் காவிரியாக இருந்து தமிழகத்தில் அனைவருக்கும் சம உரிமை கிடைப்பதற்கு வழிகாட்டியாக இருந்தார். பெரியாரின் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும். பெரியாரின் சமூக சீர்த்திருத்த கொள்கைகளை அதிமுகவினர் பின்பற்றி வருகிறார்கள்.

எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தபடி அதிமுக மீண்டும் மலரும். சசிகலா, டிடிவி தினகரன் உள்பட அதிமுக அணிகள் இணையும் காலம் வெகுதொலைவில் இல்லை. திமுக கூட்டணிக் கட்சிகள் நடத்தும் இந்த நவயுக நாடகத்திற்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like