அதிமுக மேலும் பல அணிகளாக உடையும் - பெ.சண்முகம்..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்," பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் குழந்தை இறப்பு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில் மருத்துவ கட்டமைப்பு சரி இல்லாததது தான் குழந்தை உயிரிழப்புக்கு காரம் என கூறி உள்ளார்.
தமிழ்நாட்டில் பிற மாநிலங்களை காட்டிலும் சிறந்த மருத்துவ கட்டமைப்பு இருக்கிறது. குழந்தை இறப்பில் தவறு யார் செய்தார்களோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு மக்களுக்கு பயன்படுத்த கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமல்ல. திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியது போன்று மெது மெதுவாக மதுபான கடைகளை முட வேண்டும். நாங்கள் பள்ளி, கல்லூரிகள் அருகே இருக்கும் மதுக்கடைகளை மூ வேண்டும் என தொடர்ந்து போராடுகிறோம்.
தவெக தலைவர் விஜய்க்கு "ஒய்" பிரிவு பாதுகாப்பை, பாஜக அரசு உள்நோக்கத்துடன் பிரதிபலனை எதிர்பார்த்து வழங்கிய போன்று தெரிகிறது. அதிமுக மேலும் பல அணிகளாக உடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு பற்றி விரைவாக 2 கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மத்திய-மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினை அண்டை நாட்டு பிரச்சினை ஆகும். இதனை மத்திய அரசு தான் பேசி உடன்பாடு எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் " என பெ. சண்முகம் கூறினார்.