1. Home
  2. தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 24ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்..!

1

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியாகி இருக்கும் சம்பவம் மொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி உள்ளது.மெத்தனால் கலந்த பாக்கெட் சாராயத்தை வாங்கி குடித்த நிலையில் அவர்களுக்கு திடீர் வாந்தி, வயிற்றெரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 நாளில் மட்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் 42 பேர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இத்தகைய சூழலில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி,இறந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இறந்தவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.அதோடு கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதற்கு உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும். அதோடு அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மாநில அரசை கண்டித்தும், முதல்வர் ஸ்டாலினை பதவி விலக்கோரியும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛ தமிழ் நாட்டில் கள்ளச் சாராய புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய, விடியா திமுக அரசைக் கண்டித்தும்; கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தியதால் பலர் பலியான சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்

அதோடு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும். மேலும் முதல்வர் பதவி விலக வலியுறுத்தியும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. அதன்படி வரும் 24ம் தேதி அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளது'' என தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like