1. Home
  2. தமிழ்நாடு

பாமகவை தொடர்ந்து போராட்டத்தில் குதிக்கும் அதிமுக..!

1

தமிழகத்தில் வீடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின்கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 4.83 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இந்த உயர்த்தப்பட்ட மின்கட்டணம் என்பது ஜுலை 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் மின்கட்டண உயர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர், தேமுதிக உள்பட பல எதிர்க்கட்சிகள் மின்கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 19-ம் தேதி சென்னையில் பாமக சார்பில் அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்

இந்நிலையில் தான் மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் திமுக அரசு பதவயேற்ற கடந்த 3 ஆண்டுகளில் மூன்றாவது மறையா மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கிறது.

அதேபோல் நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்தும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும், வரும் 23.7.2023 - செவ்வாய்க்கிழமை காலை 10 .30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தெரிவித்து கொள்கிறோம்'' என கூறப்பட்டுள்ளது.

 

Trending News

Latest News

You May Like