முதல்வர் வேட்பாளரை அறிவிக்க உள்ள அதிமுக! யார் அவர்?

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈபிஎஸ் – ஓபிஎஸ் என இரண்டு அணிகள் கட்சியில் இருப்பதால் இந்த முரண்பாடு வரும் என்பது எதிர்பார்த்த ஒன்று தான்.
இந்நிலையில் அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து வரும் 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என மூத்த தலைவர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். இதனிடையே செயற்குழு கூட்டத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
துணை முதல்வர் ஓபிஎஸ் பேசும்போது, தற்போது நடக்கும் ஆட்சிக்கு மட்டுமே துணை முதல்வராக இருக்க சம்மதித்தேன், என்னை முதல்வர் ஆக்கியது ஜெயலலிதா, ஆனால் உங்களை(ஈபிஎஸ்)முதல்வர் ஆக்கியது சசிகலா எனத் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த ஈபிஎஸ் இருவரையும் முதல்வர் ஆக்கியது சசிகலாதான் என்று கூறினார். ஒரு முதலமைச்சராக நான் என்ன சிறப்பாக செயல்படவில்லையா? பிரதமரே எனது தலைமையிலான ஆட்சியை பாராட்டியுள்ளார், கொரோனா காலத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன் என ஈபிஎஸ் தெரிவித்துள்ளார். இதனால் இனிவரும் காலங்களில் அதிமுகவில் அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
newstm.in