அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 16 மக்களவைத் தொகுதிகளுக்கான அ.தி.மு.க. சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.
அதில், சென்னை வடக்கு தொகுதியில் ராயபுரம் மனோகரன், சென்னை தெற்கு தொகுதியில் ஜெயவர்தன், ஈரோடு மக்களவைத் தொகுதியில் ஆற்றல் அசோக் குமார், சிதம்பரத்தில் சந்திரஹாசன், மதுரை தொகுதியில் சரவணன், ராமநாதபுரம் தொகுதியில் ஜெயபெருமாள், காஞ்சிபுரத்தில் ராஜசேகர், கிருஷ்ணகிரி தொகுதியில் ஜெயபிரகாஷ், அரக்கோணம் தொகுதியின் விஜயன், ஆரணியில் கஜேந்திரன், விழுப்புரம் தொகுதியில் பாக்யராஜ், சேலம் தொகுதியில் விக்னேஷ், நாமக்கல் தொகுதியில் தமிழ்மணி, கரூர் தொகுதியில் தங்கவேல், தேனி தொகுதியில் நாராயணசாமி, நாகை தொகுதியில் சுர்ஜித் சங்கர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.