1. Home
  2. தமிழ்நாடு

அதிமுக ஊராட்சி மன்ற தலைவர், ஊழியர் படுகொலை.. இரட்டை கொலையால் பதற்றத்தில் மதுரை !

அதிமுக ஊராட்சி மன்ற தலைவர், ஊழியர் படுகொலை.. இரட்டை கொலையால் பதற்றத்தில் மதுரை !


மதுரை மாவட்டம் வரிச்சியூர் அருகே உள்ள குன்னத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக கிருஷ்ணன் என்பவர் உள்ளார். கிருஷ்ணன் அதிமுக பிரமுகர் ஆவார். அவருடைய நண்பரும், உறவினருமான முனுசாமி ஊராட்சி ஊழியராக இருந்தார்.

நண்பர்களான இருவரும் அன்றாடம் மாலை நேரத்தில் குன்னத்தூரில் உள்ள சமணர் படுக்கையில் அமர்ந்து பேசி பொழுதுபோக்குவது வழக்கம். அந்தவகையில் நேற்று மாலையும் மலைப்பகுதியில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

அதிமுக ஊராட்சி மன்ற தலைவர், ஊழியர் படுகொலை.. இரட்டை கொலையால் பதற்றத்தில் மதுரை !

வழக்கமாக இரவு ஆனதும் இருவரும் அவரவர் வீட்டிற்கு திரும்புவர். ஆனால் நேற்று இரவு நெடுநேரமாகியும் இருவருமே வீடு திரும்பவில்லை. இதனையடுத்து இரு வீட்டாரும் மாறிமாறி கேட்டுக்கொண்டு தேடத்தொடங்கினர்.

காலையில் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தப்போது இருவரும் சடலமாக கிடந்தனர். இதனை கண்ட உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அப்போது இருவரின் உடலில் படுகாயங்கள் காணப்பட்டன. இதனால் இருவரையும் ஒரு கும்பல் அடித்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இக்கொலை முன்விரோதம் காரணமாக நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே, இரட்டைக் கொலை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் சிவகங்கை - மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கொலையாளிகளை கைது செய்ய விரைந்த நடவடிக்கை எடுப்பபோம் என அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

newstm.in

Trending News

Latest News

You May Like