1. Home
  2. தமிழ்நாடு

அ.தி.மு.க. அதிகாரபூர்வ அறிவிப்பு..! புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி..!

1

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து நேற்று 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க. வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து புதிய தமிழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி ஒப்பந்தம் செய்து கொண்டது.

இது தொடர்பாக அ.தி.மு.க. தரப்பு விடுத்துள்ள அறிக்கையில், 

அ.தி.மு.க.வுக்கும், புதிய தமிழகம் கட்சிக்கும் இடையே இன்று(நேற்று) உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) நாடாளுமன்றத் தொகுதியை ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது.

அதே போல், அ.தி.மு.க.வுக்கும், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கும் இடையே இன்று(நேற்று) உடன்பாடு ஏற்பட்டது. அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியை ஒதுக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது. 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், தனித் தனியே நேரில் சந்தித்து அதற்கான ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் தனிச்சின்னத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like