1. Home
  2. தமிழ்நாடு

அ.தி.மு.க. சார்பில் 2 ஆயரம் பேருக்கு மட்டன் பிரியாணி..!

1

அ.தி.மு.க.நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 107 -வது பிறந்த நாளை முன்னிட்டும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டும் மதுரை மாநகர் மாவட்ட மத்திய 5-ம் பகுதி 76- வட்ட அ.தி.மு.க. சார்பில் சி.கந்தகுமார், எம்.ஏ.நாசர், பால ராமச்சந்திரன், ஐயப்பன், செல்வகுமார் ஆகியோர் ஏற்பாட்டில் 2000-க்கும் மேற்பட்டோருக்கு மட்டன் பிரியாணியை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார். 

முன்னதாக தி.மு.க. முன்னாள் வட்டக் கழகச் செயலாளர் குட்டி என்ற கருப்பையா ,திமுக வட்டபொருளாளர் துரைப்பாண்டி , பகுதி திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக்குமார் உள்ளிட்ட  200-க்கும் மேற்பட்ட அக்கட்சியில் இருந்து விலகி  அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமியின் தலைமையை ஏற்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். அதனையொட்டி முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அ.தி.மு.க.கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். 

இதில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், பா.குமார்,சக்தி மோகன்,  பரவை ராஜா, வி.பி.ஆர்.செல்வகுமார், எம்.எஸ்.கே.மல்லன்,  தளபதி மாரியப்பன், எம்.ஜி.ராமச்சந்திரன்,சக்தி விநாயகர் பாண்டியன், ரவிராஜ், கோவில் நெடுஞ்செழியன், நாகேந்திரன், ஸ்வீட்ஸ்டால் சுப்பையா,பஜார் துரைப்பாண்டி, கார்னர் பாஸ்கர், முருகதாசன், பி.ராஜேந்திரன், ஆர்.போதுமணிரவி, அனிதாராமச்சந்திரன்,வைகைசிவா, ஜீலான் பாஷா, லாரன்ஸ், சுபேதார், பாவலர் ராமச்சந்திரன், சுல்தான், குமரவேல்ஸ ஜெயராமன், செளந்தர்ராஜன், யமுனா, கணேஷ்பாபு, பாரதிராஜா,ஏசியன் மணி, கேசவபாண்டியன், கோபால், பெயிண்டர் குமார், குட்டியம்மாள்,  நாகேஸ்வரி,  சரஸ்வதி, கல்யாணி, பால்கடை பாலமுருகன், காத்தாடி கணேசன், பூசாரி போஸ், ஆறுமுகபாண்டியராஜன், பத்மநாபன், செல்வப்பாண்டி, எம்.ஜி.ஆர்.பாலு,  ஆர்.திலகர், எஸ்.விஜயகுமார், பி.தமயந்தி பால்பாண்டி, ஈஸ்வரி மணிகண்டன், கொடி முத்து, ஜி.செல்வகுமார், கே.பி.ராஜ்குமார்,  எம்.முத்துகிருஷ்ணன், வி.வி.கே.அசோக்குமார், ஏ.முத்துகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Trending News

Latest News

You May Like