தேனிக்கு ரயில் சேவை! அதிமுக எம்.பி. ரவீந்ரதிநாத் கோரிக்கை ஏற்பு!

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமன ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான, ரவீந்ரதிநாத் ஆலோசனையை ஏற்று இரயில்வே அதிகாரிகள் பாரஸ்ட் ரோடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
தேனி பாராஸ்ட் ரோடு இரயில்வே பாதை பகுதியில் குடியிருந்து வரும் குடியிருப்பு வாசிகளுக்கு பாதிப்பு வராத வண்ணம் பணிகளை விரைவு படுத்திட வேண்டும் என அதிமுகவைச் சேர்ந்த தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது அலோசனையின்பேரில், தேனி பாராஸ்ட் ரோடு இரயில்வே பாதை பகுதியில் இரயில்வே கட்டிட செயற்பொறியாளர் சூரியநாராயணன், போடி-மதுரை இரயில் பாதை சீனியர் செக்சன் பொறியாளர் பாஸ்கரன், தேனி வட்டாட்சியர் பிரதிபா மற்றும் இரயில்வே, வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வினை தொடர்ந்து இரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ரயில்வே பாதை நடுமையத்திலிருந்து இரு புறமும் 12 மீட்டர் அளவிற்கான இடங்களை ஒதுக்கி கொடுத்தால் தான் இரயில்வே பணிகளுக்கான தளவாடங்களை வாகனங்கள் மூலம் விரைவாக கொண்டு சென்று பணிகளை விரைவு படுத்தி வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முழுமை பெற முடியும். எனவே இருபுறமும் 12 மீட்டர் அளவிற்கான பகுதியில் உள்ளவர்கள் இடங்களை ஒதுக்கி கொடுத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனர்.
இரயில்வே பாதை பகுதியில் குடியிருந்து வரும் 203 குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தப்புக்குண்டு, வடவீரநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகள் ஒதுக்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது என வருவாய்துறையினர் தெரிவித்தனர்.