எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித் துண்டு !! அதிமுக எம்.எல்.ஏ - க்கள் போராட்டம்..

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித் துண்டு !! அதிமுக எம்.எல்.ஏ - க்கள் போராட்டம்..

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித் துண்டு !! அதிமுக எம்.எல்.ஏ - க்கள் போராட்டம்..
X

புதுச்சேரி விழுப்புரம் செல்லும் வில்லியனூர் புறவழி சாலையில் அமைந்துள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆரின் உருவச் சிலைக்கு மர்மநபர் ஒருவர் காவி துண்டு அணிவித்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இச்சம்பவத்தை கண்டிதது நேற்று அப்பகுதிக்கு சென்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காவி துண்டு அணிவித்தவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை இதனை கண்டித்து புதுச்சேரி சட்டப்பேரவையின் வாயிலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் வையாபுரி மணிகண்டன், அசனா ஆகியோர் துணை நிலை ஆளுநர் உரைக்கு செல்லும் பாதையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றனர்.

உடனடியாக காவல் துறை அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் சட்டப்பேரவைக்கு திரும்பினர்.

Newstm.in

Next Story
Share it