அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்..!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கிய அ.தி.மு.க.வினர், நேற்று (வெள்ளிக்கிழமை) கறுப்புசட்டையில் சட்டப்பேரவைக்கு வந்தனர். சட்டப்பேரவை நிகழ்வுகளை ஒத்திவைத்துவிட்டு கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அ.தி.மு.க. உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். கூடவே ‘பதவி விலகுங்கள் ஸ்டாலின்’ என்ற பதாகையை காண்பித்தவாறு அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானத்தின் மீது கேள்வி நேரம் முடிந்ததும் விவாதிக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். ஆனால், அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் உறுப்பினர்கள் தர்ணா செய்தனர். இதையடுத்து சபாநாயகர் அவர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, அவைக் காவலர்கள் அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அவை பாதுகாவலர்களால் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெறியேற்றப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.