சாதி மறுப்பு திருமணம் செய்த அதிமுக எம்எல்ஏ.. குவியும் வாழ்த்து !

சாதி மறுப்பு திருமணம் செய்த அதிமுக எம்எல்ஏ.. குவியும் வாழ்த்து !

சாதி மறுப்பு திருமணம் செய்த அதிமுக எம்எல்ஏ.. குவியும் வாழ்த்து !
X

கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு தனது காதலி சௌந்தர்யாவை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.

தியாகதுருகத்தில் உள்ள அவரது இல்லத்தில் எம்எல்ஏவின் பெற்றோர்கள் தலைமையில் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது. இதையடுத்து எம்எல்ஏ பிரபு – சௌந்தர்யா தம்பதிக்கு அதிமுக நிர்வாகிகள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

தமிழகத்தில் அண்மைக்காலமாக சாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனை நீதிமன்றம் கண்டித்தும் கூட இக்கொடூரம் தொடர்கிறது.

இந்நிலையில் அதிமுக எம்எல்ஏ சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளது அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. இதனையொட்டி அதிமுகவினர் மட்டும் இல்லாமல் அனைத்து தரப்பினரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it