1. Home
  2. தமிழ்நாடு

அதிமுக கட்சி தனது கடைசி காலத்தை நெருங்கி வருகிறது - எம்பி மாணிக்கம் தாகூர்..!

1

விருதுநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எம்பி மாணிக்கம் தாகூர் மதுரை திருநகரில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளார்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எதிர்க்கட்சி உறுப்பினர் துணை சபாநாயகர் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய வாய்ப்பும் அளிக்கப்படுவதில்லை, பிஎஸ்சி குழுவில் ஆலோசித்து தான் வரான் மனதில் விவாதம் நடைபெறும். ஆனால் பிஎஸ்சி குழுவில் விவாதம் செய்வதை விட்டுவிட்டு புதிது அல்ல சட்டங்களை கொண்டு வருகிறார்கள். ராணுவம் தொடர்பாக இந்த ஒரு விவாதமும் இதுவரை நடத்தப்படவில்லை. ஒத்திவைப்பு தீர்மானம் என்பது ஏற்றுக் கொள்ளப்படாமல் உள்ளது.

விவாதங்களை அரசு தொலைக்காட்சி தான் ஒளிபரப்பு மற்ற தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதில்லை. எதிர்க்கட்சிகள் பேசுவதை ஒளிபரப்புவதில்லை அவருடைய ஒளிபரப்பினாலும் குறைந்த வினாடிகளே ஒளிபரப்புகிறார்கள். முறையான வாய்ப்பு வழங்காததால் தொகுதி பிரச்சனைகள் முழுமையாக பேச முடியாத சூழல் உருவாகி உள்ளது. இது தொடர்பான கருத்துக்களைச் செய்தியாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ராகுல் காந்தி உத்தரவிட்டதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து வருவதாக எம்பி தெரிவித்தார். 100 நாள் வேலை திட்டத்தில் தமிழக அதிகாரிகள் தான் கையாடல் செய்கிறோம் என அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு, அண்ணாமலை 100 நாள் வேலையை நேரில் சென்று பார்த்தது கிடையாது, அவருக்கு அதைப் பற்றி தெரியாது பெரிய இடத்தில் உள்ளார்.

பணக்காரர்களுடன் உள்ளார் தயவுசெய்து அண்ணாமலை 100 நாள் வேலையை நேரில் சென்று பார்க்க வேண்டும். முறைகேடு நடக்கும் இடத்தை  விட்டு விட்டு100 நாள் வேலைகளில் முறைகேடு செய்வதாக கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அண்ணாமலைக்கு இது பற்றி தெரியாது,100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்கு நான்கு மாத ஊதியம் வழங்காதது பச்சை துரோகம். இது தவறான போக்கு மாநில அரசு மீது மக்களுக்கு கோபம் வரும் என நினைக்கிறார்கள். அதிமுக காரர்களுக்கு இதுபற்றி நன்றாக தெரியும் தொடர்ந்து மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள் இதில் தண்டிக்கப்பட போறவர்கள் அதிமுக காரர்களாகத்தான் இருக்க போகிறார்கள்.

அமித் ஷாவை இந்தியாவின் இரும்பு மனிதர் என்று ஆர்பி உதயகுமார் கூறியது குறித்த கேள்விக்கு, அண்ணே ஆர்.பி உதயகுமார் சர்தார் வல்லபாய் பட்டேலை பார்த்ததில்லை என்று நினைக்கிறேன் தகர டப்பாவை பார்த்து இரும்பு டப்பா என்று சொல்கிறார் இரும்பு மனிதரை பார்க்காதவருக்கு அப்படித்தான் தெரியும் அண்ணே உதயகுமார் இவ்வளவு வேகமா பஜனை மாற்றக்கூடாது. ஆர்.பி.உதயக்குமார் மூன்று மாதங்களுக்கு முன்பு பேசிய பேச்சு தற்போது பேசிய பேச்சு எல்லாம் மக்களுக்கு தெரியும் அந்த ரீலு எல்லாம் அந்து போய்விடும் மக்கள் கோபப்பட்டுருவாங்க அவர் இத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது.

அதிமுகவினர் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு, அண்ணா திமுகவா இருந்து அமித்ஷா திமுககவாக மாறிவிட்டது இணைப்பு விழா நடத்திருக்கலாம் அமித்ஷாவுடன் ரிப்போர்ட் பண்ற கட்சியாக அது உள்ளது அதிமுக நிர்வாகிகள் புகார் தெரிவிப்பதற்காகத்தான் அமித்ஷாவை சந்திக்கிறார்கள் வேகமாக அதிமுக மக்களின் செல்வாக்கை இழந்து வருகிறது அதே நேரத்தில் தவெகாவின் வளர்ச்சியும் அதிமுகவின் வாக்கு வங்கி தவெகாவிற்கு சொல்வதற்கான வாய்ப்புகள் நிறையா உருவாகிவிட்டது அந்தக் கட்சி கடைசி காலத்தை நெருங்கி வருகிறது இது எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாக்கும் செய்கிற துரோகம் இவர்கள் அமித்ஷாவின் அடிமையாக மாறி இருப்பது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய துரோகம் மற்ற மாநிலங்களில் பாஜக மற்ற கட்சியை விழுங்கி பாஜக உருவாகியுள்ளது.

பாஜகவையும் திமுகவையும் ஒரே எதிரியாக விஜய் கொண்டு வருகிறார் இதில் காங்கிரசின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, பாஜகவும்,திமுகவும் பாசிச ஆட்சி நடத்தி வருவதாக விஜய் கூறியதற்கு இந்தியாவின் ஒற்றுமைக்கு மிகப்பெரிய ஆபத்து ஆர் எஸ் எஸ். எங்களுடைய பார்வையில் திமுக அது போன்று இல்லை என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like