1. Home
  2. தமிழ்நாடு

அதிமுக கோட்டையாக இருப்பதால் ஈரோடுயில் வெற்றி உறுதி..!

1

ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பு அருகில் ஈரோடு தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை அமைக்க கால்கோள் விழா நடைபெற்றது.இதில் தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் பங்கேற்றனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் உணவகத்தை மலிவு விலையில் சேவையாற்றி வருகிறார்.

ஈரோடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி உறுதி செய்தது போல தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதியில் வரலாறு படைக்கும் வகையில் அதிமுக வெற்றி வாய்ப்பு உள்ளது. மக்களும் அதிமுக ஆதரவாக வாக்களிக்க தயாராகி வருகிறார்கள்., அதிமுக களப்பணி இந்த இயக்கத்தாலும் செய்ய முடியாத வகையில் இருக்கும்,அதற்கு அதிமுக கூட்டணி நிர்வாகிகள் உறுதியாக இருப்பார்கள், அதிமுக பொறுத்தவரை கொங்கு மண்டலம் அதிமுக கோட்டையாக இருப்பதால் வெற்றி உறுதி செய்யப்பட்டது ஒன்று என தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் தனது காரில் கட்சி கொடி கட்ட அனுமதி பெறததால் காரிலிருந்த கட்சி கொடியை அகற்ற சொன்ன பறக்கும் படை, இதனையடுத்து காரிலிருந்து அதிமுக கட்சி கொடியை அதிமுகவினர் அகற்றினர்

Trending News

Latest News

You May Like