திண்டுக்கல் லியோனி மீது அதிமுகவினர் காவல்துறையில் புகார்..!

அதிமுக மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராஜ்சத்யன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “விடியா அரசு பாதுகாப்பற்ற அரசாக மாறியுள்ளது. மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசும் லியோனி, விடியா அரசின் பாடநூல் கழக தலைவராக உள்ளார். அவர் இன்றைக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியுள்ளார். அவருக்கு கண்டனம் தெரிவிக்கின்றோம். அவரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறை ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் அவரை பாடநூல் கழக தலைவர் பொறுப்பில் இருந்தும் அரசு நீக்க வேண்டும்.