1. Home
  2. தமிழ்நாடு

அதிமுக தேர்தல்.. வேறு யாரும் களத்தில் இல்லாததால் ஓபிஎஸ்- இபிஎஸ் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு

அதிமுக தேர்தல்.. வேறு யாரும் களத்தில் இல்லாததால் ஓபிஎஸ்- இபிஎஸ் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு


அதிமுக செயற்குழு கூட்டம் கடந்த 1ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. அப்போது அதிமுக சட்டவிதிகளில் முக்கிய திருத்தங்கள் செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும் அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள் என்று விதியில் திருத்தம் செய்யப்பட்டது.

அதற்கு மறுநாள் (டிச.2) அதிமுக உள்கட்சி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 7ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான மனுதாக்கல் கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. இதில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்தனர். இவர்கள் இருவருக்கும் ஆதரவாக நிர்வாகிகள் பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அதிமுக தேர்தல்.. வேறு யாரும் களத்தில் இல்லாததால் ஓபிஎஸ்- இபிஎஸ் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றதையடுத்து, வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அப்பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுகவில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. விசாரணை நடத்திய நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.

newstm.in

Trending News

Latest News

You May Like