அதிமுக தரப்பில் வயநாடுக்கு ரூ 1 கோடி நிதி!
வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது.
அதற்கான காசோலையை, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையிலான குழு நேரில் சந்தித்து வழங்கியது.
இப்போது வரை மொத்தம் 402 பேர் இந்த நிலச்சரிவில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 150 பேர் நிலைமை என்ன என்பது இன்னும் தெரியாமல் உள்ளது