வரும் 17ஆம் தேதி சென்னையில் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்..!

அதிமுக அதிகாரப்பூர்வ தளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 17.10.2023 செவ்வாய் கிழமை காலை 10.30 மணிக்கு, சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாக, பூத் கமிட்டி அமைத்தல்; இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் முதலான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கண்ட பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை தொடர்ந்து, அடுத்தடுத்து அதிரடி நகர்வுகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் அக்கட்சியில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/meL8o86JhY
— AIADMK (@AIADMKOfficial) October 13, 2023
தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/meL8o86JhY
— AIADMK (@AIADMKOfficial) October 13, 2023