1. Home
  2. தமிழ்நாடு

மாநகராட்சி கூட்டத்திற்கு தலையில் முக்காடு போட்டுவந்த அதிமுக கவுன்சிலர்கள்!

1

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விட்ட்டோரிய ஹால் கூட அரங்கில் மேயர் ரங்கநாயகி தலைமையில் மாமன்ற சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. மாநகராட்சி கூட்டத்திற்கு வந்த அதிமுக கவுன்சிலர்கள் சர்மிளா  (வார்டு 38), பிரபாகரன் (வார்டு 47) மற்றும் ரமேஷ் (வார்டு 90) ஆகியோர் தலையில் முக்காடு போட்டபடி கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மாநகராட்சியில் சொத்துவரி 6 % உயர்த்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலையில் முக்காடு போட்டபடி கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ளதாகவும், 6 % வரியினை திரும்ப பெற வேண்டும் என்றும் அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

Trending News

Latest News

You May Like