1. Home
  2. தமிழ்நாடு

அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்..?

1

தமிழ்நாட்டை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்.19ம் தேதி நடைபெற உள்ளது. தற்போதை அரசியல் சூழ்நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து தங்களுக்கான தொகுதிகளில் உடன்பாட்டை ஏற்படுத்தி பிரச்சாரகளத்தில் பொதுமக்களிடையே வாக்குகளை சேகரித்து வருகின்றன. குறிப்பாக, திமுக 21 இடங்களிலும் அதன் தோழமை கட்சிகள் மீதமுள்ள 19 இடங்களிலும் போட்டியிடுகின்றன. அதேபோல், அதிமுக 33 தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளிலும் களம் காண்கின்றன.

மேலும், பாஜக, நாம் தமிழர் கட்சி என களத்தில் நிற்பதால் தமிழகத்தில் தற்போது நான்கு முனைப்போட்டிகள் நிலவி வருகின்றன. மேலும், தேர்தல் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது. இதில் பெரும்பாலும் சுயேச்சை கட்சிகள் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றன. அதேபோல், மார்ச் 27ம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவுப்பெறவுள்ள நிலையில் திமுக - அதிமுக மற்றும் பிரதான கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் இன்னும் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை.

இந்தநிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று காலை 12 மணியளவில் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுவாக நல்ல நாள் பார்த்து வேட்பு மனு தாக்கல் செய்வது வழக்கம். அதன்படி இன்று பங்குனி உத்திரம் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். மேலும், மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு என்பது வழக்கம். அதன்படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் படி, அ.தி.மு.க வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதே போல் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். மேலும், இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாதவர்கள், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான 27ம் தேதி மனுதாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Trending News

Latest News

You May Like