1. Home
  2. தமிழ்நாடு

அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தீ மிதித்து வழிபாடு..!

1

2024 ம் ஆண்டிற்கான மக்களை தேர்தலில் கோவை தொகுதி மிக முக்கியமான தொகுதியாக மாறியுள்ளது. தேர்தலில் நிற்கப்போவதில்லை என்று கூறி வந்த அண்ணாமலை, கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக சார்பில் முன்னாள் மேயராக இருந்த முனைவர் கணபதி ராஜ்குமார் களம் இறங்கியுள்ளார். அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தராஜன் மகனான சிங்கை ராமச்சந்திரனை எடப்பாடி பழனிசாமி களம்  இறக்கி உள்ளார்.

அகமதாபாத் ஐஐஎம்மில் மேலாண்மை பட்டம் பெற்ற சிங்கை ராமச்சந்திரன், அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகியாக உள்ளார். இவர் 2024ம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று  தீ மிதித்து வழிபாடு செய்தார். சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பாப்பநாயக்கன் பாளையம் பண்ணாரி அம்மன் குண்டத் திருவிழாவில், குண்டம் இறங்கி சுவாமி தரிசனம் செய்தார்.

தேர்தல் நேரம் வந்தாலே இதுமாதிரியான காட்சிகளை அதிகம் பார்க்க முடியும். நடிகர் மன்சூர் அலிகான் இன்று நாட்டு மருந்து விற்று வேலூரை கலக்கியுள்ளார். சமீபத்தில்தான் அவர் சிக்கன் வெட்டி கலகலப்பை ஏற்படுத்தினார். இப்படி வேட்பாளர்கள் விதம் விதமாக பிரச்சாரத்தைக் கடைப்பிடித்து கலகலப்பை கூட்டிக் கொண்டுள்ளனர்.

Trending News

Latest News

You May Like