1. Home
  2. தமிழ்நாடு

இந்த தேதிக்கு பிறகு அதிமுக, திமுக ஒன்று சேருவார்கள்.!ஏன் .? பகீர் கிளப்பிய அண்ணாமலை..!

Q

கோவையில் நிருபர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: 2019 ல் அளித்த 295 வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளோம். திமுகவை போல் சொன்ன விஷயத்தை திரும்ப பா.ஜ., சொல்லாது. மோடி செய்தது, பாஜ செய்தது மக்களுக்கு தெரியும்.

கோவையில் எந்த வேட்பாளருடனும் நான் போட்டி கிடையாது. அவர்கள் என்னை என்ன வேண்டுமானலும் சொல்லலாம். ஆனால் கோவை வேட்பாளர்களுடன் சண்டை போட நான் வரவில்லை. என்னுடைய வேலை மக்கள் பிரச்சனைகளை சொல்லி வாக்கு கேட்பது என கூறினார். கோவை மக்களுக்கு தெரியும் பாஜக என்ன செய்திருக்கிறது என்று. அண்ணாமலை சொல்ல வேண்டியதில்லை என கூறினார்.

மத்திய அரசுக்கும், கோவை மக்கள் இடையே ‛ ஹாட்லைன் ' ஆக இருப்பேன். மக்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே இணைப்பு பாலமாக இருந்து திட்டங்களை வேமாக செயல்படுத்துவோம்.

அதிமுக, திமுக ஏப்.,10 ல் ஒன்று சேர்வார்கள். ஒன்று சேர்வதை கடைசி 10 நாளில் எதிர்பார்க்கிறேன். அன்றைக்கு பங்காளி கட்சிகள் சுயரூபத்தை நீங்கள் பார்ப்பீர்கள். இரண்டு கட்சிகளும், தேர்தலில் நிற்பது பண பலம், படைபலத்தை வைத்து அண்ணாமலையை தோற்கடிக்க. திமுக.,வுக்கு இங்கு என்ன வேலை. அதிமுக ஏன் சுற்றி சுற்றிவருகிறார்கள்.

ஏப்.,10க்கு மேல் கடைசியில் இரண்டு வேட்பாளர்களில் ஒருவர் விட்டுக்கொடுத்து ஒருவரை நிறுத்தி ஓட்டு டிரான்ஸ்பர் செய்ய உள்ளனர். கேரளாவில் இது நடந்துள்ளது. கோவையில் முதல்முறை பார்க்க போகிறோம்என அண்ணாமலை தெரிவித்தார். 

Trending News

Latest News

You May Like