1. Home
  2. தமிழ்நாடு

கேரளாவில் அறிமுகமான AI டீச்சர்..!

1

கேரளாவின் கல்வித்துறையில்  ஏஐ மூலம் ரோபோட் டீச்சர் உருவாக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது.திருவனந்தபுரத்தில் இருக்கும் கேடிசிடி மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் ஏஐ டீச்சர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டீச்சருக்கு ஐரிஸ் என பெயர் வைத்திருக்கிறார்கள்.

கேரளாவை பொருத்தவரையில் முதல் ஹியுமனாய்டு ரோபோட் டீச்சராக ஐரிஸ் ரெக்கார்டு படைத்துள்ளது. இந்த கண்டுபிடிப்பானது கேடிசிடி பள்ளியின் "கடுவையில் தங்கல்" அறக்கட்டளை செயல்படுத்தி இருக்கிறது. அடல் டிங்கரிங் லேப் (Atal Tinkering Lab) என்கிற நிதி ஆயோக் (NITI Aayog) திட்டத்தின் பகுதியாகவே இந்த ஐரிஸ் ரோபோட் டீச்சர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ரோபோட் டீச்சர் கடந்த மாதத்தில் அறிமுகமாகியுள்ளது. இதன் வீடியோக்களை சமூகவலைதள பக்கங்களில் மேக்கர்லேப் நிறுவனம் பகிர்ந்திருக்கிறது. இந்த டீச்சர் சாதாரண கேள்விகள் முதல் கடினமான கேள்விகள் வரை பல பாடத்திட்டங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும். அதுமட்டுமல்லாது, இந்த ஏஐ டீச்சர் பல மொழியிலும் அசத்தும்.

Trending News

Latest News

You May Like