1. Home
  2. தமிழ்நாடு

விரைவில் தேசிய சாலைகளில் ஏஐ கேமரா.. இனி யாரும் தப்பிக்க முடியாது..!

1

இந்தியாவில் அதிகரித்து வரும் விபத்துகளை தடுக்க புதிய நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அதாவது தேசிய எக்ஸ்பிரஸ் வே சாலைகளில் செய்யப்படும் முறைகேடுகளை, போக்குவரத்து மீறல்களை தடுக்க ஏஐ கேமரா பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வகை கேரமரா தானாக போக்குவரத்து மீறல்களை கண்டறியும். அவ்வாறு விதிகளை மீறினால் அவர்களை உடனே புகைப்படம் எடுத்து புகார் பதிவு செய்யும். இந்த கேமராவை நாடு முழுக்க எக்ஸ்பிரஸ் வே சாலைகளில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த கேமராவை முதல் கட்டமாக பெங்களூர் – மைசூரு சாலையிலும், சென்னை – பெங்களூர் சாலையிலும் பணிகள் முடிந்த பின் பொருத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விதி மீறல்களை படம் பிடித்த பின் அந்த வாகனம் பதிவு செய்யப்பட்டு உள்ள ரிஜிஸ்ட்ரேஷன் எண்ணிற்கு போன் மூலம் அபராதம் அனுப்பப்படும். அதை ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரிலோ செலுத்தலாம்.

Trending News

Latest News

You May Like