1. Home
  2. தமிழ்நாடு

ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ரமேஷ் விஸ்வாஸ் குமாரின் புதிய வீடியோ வெளியீடு..!

Q

ஏர் இந்தியா விமான விபத்தில் லண்டன் குடியுரிமை பெற்ற இந்தியரான விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்பவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காயம் அடைந்த அவர் ஆமதாபாத் சிவில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமுடன் உள்ளார்.
விமான விபத்தின் போது உயிர் பிழைத்த விஸ்வாஸ் குமார் ரமேஷின் புதிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மொபைல் போன் ஒன்றை கையில் வைத்துக்கொண்டு வெள்ளை நிற டி ஷார்ட் உடன் ரமேஷ், விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து காயங்களுடன் நடந்து வருகிறார். அவரை அங்கிருந்த உள்ளூர் மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். இந்த புதிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 11A- இருக்கையில் விஷ்வாஸ் குமார் ரமேஷ் பயணம் செய்து இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.


 


 

Trending News

Latest News

You May Like