1. Home
  2. தமிழ்நாடு

அகமதாபாத் விமான விபத்து: பலி எண்ணிக்கை 204 ஆக உயர்வு..!

1

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு நேற்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. மேகானி நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதியது. அங்கு இருந்த 60 பயிற்சி மருத்துவர்களின் கதி என்ன? என தெரியவில்லை.

விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்தனர். இதில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் இங்கிலாந்தை சேர்ந்வர்கள். ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. 12 வயதிற்கு உட்பட்ட 14 குழந்தைகள் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார்

இந்த விபத்தில் 130 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. தற்பொழுது பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கடைசியாக கிடைத்த தகவலின் படி 204 ஆக உயர்ந்துள்ளது.

Trending News

Latest News

You May Like