1. Home
  2. தமிழ்நாடு

அகமதாபாத் விமானம் விபத்தா ?...சதியா...? ஏர் இந்தியா விளக்கம்..! விபத்து நிகழ்ந்தது எப்படி?

1

குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து, லண்டனுக்கு AI171 விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் உள்ளிட்ட 242 பயணிகள் பயணித்துள்ளனர். இதில், பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் 53 பேர், ஒரு கனடா நாட்டைச் சேர்ந்தவர், 7 போர்ச்சுக்கல் நாட்டசைச் சேர்ந்தவர்கள் மற்றும் 169 இந்தியர்கள் பயணித்துள்ளனர். இந்த பயணிகளில் 7 குழந்தைகள் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், இரு கைக்குழந்தைகள் என கூறப்படுகிறது. இதில், 130 பேர் உயிரிழந்திருப்பதாகவும், அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விமானம் குஜராத் மாநிலம் , அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து (ஜூன் 12) மதியம் 1.38 மணிக்கு பறக்கத் தொடங்கியது. ஆனால், சிறிது தெலைவு சென்ற நிலையில், 1.42 மணிக்கு கட்டுப்பாட்டை இழந்த விமானம் அந்தப் பகுதியில் இருந்த குடியிருப்புப் பகுதியில் விழுந்தது. இதில், அந்த குடியிருப்புப் பகுதிகள் மிகுந்த சேதமடைந்துள்ளது. மேலும், மருத்து விடுதியும் கடும் சேதமடைந்துள்ளது. இதில், உணவருந்திக் கொண்டிருந்த மருத்துவர்கள் நிலமை என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விமானம் குஜராத் மாநிலம் , அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து (ஜூன் 12) இன்று மதியம் 1.38 மணிக்கு பறக்கத் தொடங்கியது. ஆனால், சிறிது தெலைவு சென்ற நிலையில், 1.42 மணிக்கு கட்டுப்பாட்டை இழந்த விமானம் அந்தப் பகுதியில் இருந்த குடியிருப்புப் பகுதியில் விழுந்தது. இதில், அந்த குடியிருப்புப் பகுதிகள் மிகுந்த சேதமடைந்துள்ளது. மேலும், மருத்து விடுதியும் கடும் சேதமடைந்துள்ளது. 

ஒரு விமானம் புறப்படுவதற்கு முன்பு அந்த விமானத்தின் என்ஜின் முறையாக இயங்குகிறதா, எரிபொருள் கசிவு இருக்கிறதா, வேறு ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு இருக்கிறதா என்பன உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.இதன் பின்னரே, அந்த விமானம் புறப்பட்டு செல்லும். இவ்வளவு பரிசோதனைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறி விமான விபத்து நிகழ்ந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இந்த விமானத்தில் இருந்த விமானி சுமித் சபர்வால் 8,200 மணி நேரமும், துணை விமானி கிளைவ் குந்தர் 1,100 மணி நேரமும் விமானம் ஓட்டும் பயிற்சி பெற்றிருந்தவர்கள் என கூறப்படுகிறது.
 

மேலும், விமானம் புறப்பட்டு 8 நிமிடத்தில் எப்படி விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டிருக்க முடியும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், இந்த விமான விபத்து தற்செயலாக நடந்ததா அல்லது சதியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஏர் இந்தியா சார்பில் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் விமான விபத்து என்பதற்கு பதிலாக சம்பவம் என்று பதிவிட்டுள்ளது. இந்த பதிவு சந்தேகத்தை எழுப்பி இருந்தது.
 

இந்த நிலையில், இந்த விபத்து குறித்து ஏர் இந்தியா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதுக்கு காரணம் விபத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், எந்த சதியும் இல்லை என்று தெளிவுபடுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like