1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் வெப்ப அலை வீசும்..!

1

தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது., இன்று முதல் மே 7 வரை தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி வரை படிப்படியாக குறையக்கூடும். மே 6 வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பொதுவாக இயல்பை விட 2 டிகிரி – 4 டிகிரி செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசியது. அதிக பட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 44.3 டிகிரி செல்சியஸ் (இயல்பை விட +7.5 டிகிரி செல்சியஸ் அதிகம்) பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 10 இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 42 டிகிரி – 44 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 44.0 டிகிரி செல்சியஸ், வேலூரில் 43.6 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 42.7 டிகிரி செல்சியஸ், தருமபுரியில் 42.5 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 42.3 டிகிரி செல்சியஸ், சேலம் & திருப்பத்தூரில் 42.2 டிகிரி செல்சியஸ், மதுரை (நகரம்) & நாமக்கல்லில் 42.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 4 இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 40 டிகிரி – 42 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39 டிகிரி – 40 டிகிரி செல்சியஸ், பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36 டிகிரி – 40 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 25 டிகிரி –30 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 40.0 டிகிரி செல்சியஸ் (+2.9 டிகிரி செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 37.9 டிகிரி செல்சியஸ் (+1.8 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது.

அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 03வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி-5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். 05.05.2024 & 06.05.2024: வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like