1. Home
  2. தமிழ்நாடு

இன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பம்..! என்ன செய்யணும்.. என்ன செய்யக்கூடாது..? முழு விவரம் இதோ..!

1

அக்னி நட்சத்திரம் இந்த ஆண்டு இன்று மே மாதம் 4ம் தேதி தொடங்கி வரும் மே 28ம் தேதி வரை இருக்கும். இந்த காலக்கட்டத்தில் வெயில் கடுமையாக இருக்கும். அக்னி வெயில் மண்டையை பிளக்குது. கத்தரி வெயில் கண்ணை கட்டுது என்று சொல்வதை கேட்டிருப்பீர்கள்.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் அக்னி நட்சத்திரம் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 21-ம் நாள் முதல் வைகாசி மாதம் 14-ஆம் நாள் வரை இருக்கும். இந்த காலக்கட்டத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும்.ஜோதிட சாஸ்திர கணிப்புப்படி பொதுவாக 21 நாட்கள் அக்னி நட்சத்திர காலகட்டம் இருக்கும். இவை மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. முதல் 7 நாட்கள் வெப்பத்தின் அளவு மெதுவாக அதிகரிக்கத் தொடங்கும். மத்தியில் இருக்கும் 7 நாட்கள் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும். கடைசி 7 நாட்களில் மெதுவாக வெப்ப அளவு குறைந்து இயல்புநிலைக்குத் திரும்பும் என்பது ஜோதிடத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். இதன்படியே இந்த ஆண்டு வரும் மே மாதம் 4ம் தேதி தொடங்குகிறது. இந்த முறை 25 நாட்கள் அக்னி வெயில் இருக்கும் என்கிறார்கள்.

பொதுவாக கார்த்திகை நட்சத்திரம் அக்னி நட்சத்திரத்தின் சக்தியைக் கொண்டது. கார்த்திகை நட்சத்திரத்தின் தேவதையாக விளங்கும் அக்னி தேவன் இந்த காலகட்டத்தில் வெப்பத்தைக் கக்குவதால் இது அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது.இந்த அக்னி நட்சத்திர தோஷ காலம் முடிந்த பிறகு அனைத்து கோயில்களிலும் சிறப்புப் பூஜைகளும், வழிபாடுகளும் நடக்கும். இதை அக்னி கழிவு என்று கொண்டாடுவார்கள். அதேபோல் கிராமப் பகுதிகளில் அம்மன் கோயில்களில் கொடை விழா என்று கொண்டாடப்படுகிறது.

என்ன செய்யலாம் 

இந்த காலங்களில் சுப நிகழ்ச்சிகள் செய்யலாமா எனப் பலருக்கும் சந்தேகம் எழுவது உண்டு. இந்த அக்னி நட்சத்திர காலத்தில் நிச்சயதார்த்தம், பெண் பார்த்தல், சீமந்தம், திருமணம் போன்ற காரியங்கள் செய்யலாம் அதில் எந்த சிக்கலும் ஏற்படாது. சுப நிகழ்ச்சிகள் குறித்து பேச்சு வார்த்தையும் நடத்தலாம், அதற்கான ஏற்பாடுகளும் செய்யலாம்.
 

என்ன செய்ய கூடாது 

இந்த அக்னி நட்சத்திர காலத்தில் புது வீடு குடி புகுதல், பால் காய்ச்சுதல், பூமி பூஜை செய்தால், காது குத்துதல், முடி இறக்குதல், மரம் வெட்டுதல், கிணறு வெட்டுதல், விதை விதைத்தல், உள்ளிட்ட செயல்களைச் செய்யக்கூடாது. அதேபோல் நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்பு பணிகள் செய்யக்கூடாது. மேலும் வாகனங்களில் நெடுந்தூர பயணம் செய்யக்கூடாது.

Trending News

Latest News

You May Like