1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் மீண்டுமா..? விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்மநபர்கள்..!

Q

சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 10) காலை புனேவில் இருந்து 178 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அதேபோல், கடந்த ஜூன் 6ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில் இருந்து சென்னைக்கு வந்த, 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானத்தில் லேசர் ஒளி அடிக்கப்பட்டது. அதேபோல், கடந்த மே 25ம் தேதி, இதே விமானத்தின் மீது மர்ம நபர்கள் லேசர் ஒளி அடித்தனர்.

தற்போது மீண்டும் அதே சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 15 நாட்களில் 3வது முறையாக இச்சம்பவம் நடந்துள்ளது. இது மாதிரியான சம்பவங்கள் தொடர்வது, சென்னையில் விமான பாதுகாப்புக்கு கேள்விக்குறியாக மாறுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Trending News

Latest News

You May Like