மீண்டும் மீண்டுமா ? இப்படியே போனால் தீபாவளிக்கு தங்கம் விலை ரூ 60 ஆயிரம் கன்ஃபார்ம்!
தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க நினைப்போர், நகைப் பிரியர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
ஆயுத பூஜையான நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,095-க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து உள்ளது.
கிராமுக்கு ரூபாய் 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,120-க்கும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூபாய் ரூ.56,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

